சி.எஸ்.கே அணி இந்தாண்டு வெற்றிகரமாக செயல்பட்டதுக்கு இவரே காரணம். கேம் சேஞ்சர் இவர்தான் – பார்த்திவ் படேல் வெளிப்படை

Parthiv

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 11வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14 சீசனில் மோசமாக விளையாடும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணி முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மீண்டும் வலுவாக சிஎஸ்கே அணி திரும்பி உள்ளது.

CSK

இந்த திருப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பலமான அணியாக திரும்பியதற்கு காரணம் 3-வது இடத்தில் களமிறங்கிய மொயின் அலிதான் என்று குறிப்பிட்டுள்ளார். 7 போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் 157 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 206 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பவுலிங்கிலும்5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். இது குறித்து பேசிய பார்த்திவ் படேல் கூறுகையில் : நிச்சயம் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேம் சேஞ்சர் யார் என்று என்னிடம் கேட்டால் நான் மொயின் அலியைத்தான் கூறுவேன். துவக்க வீரர்கள் சரியான துவக்கம் கொடுத்தாலும் சரி, அளிக்கத் தவறினாலும் சரி மூன்றாவது வீரராக களமிறங்கும் மொயின் அலி அதிரடியாக விளையாடி அந்த ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

moeen ali 2

அவரது இந்த பேட்டிங் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளில் சிஎஸ்கே அணியும் இருக்கும் என்று நான் துவக்கத்திலேயே கூறிவிட்டேன். அதற்கு தோனியின் மீது நான் வைத்த நம்பிக்கைதான் காரணம். ஏனெனில் தோனியால் எந்த ஒரு அணியையும் வலுவாக கட்டமைக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாகவே அணியில் நேர்த்தியான சில மாற்றங்களை தோனி செய்திருந்தார். எப்போதும் மூன்றாவது இடத்தில் இறங்கும் ரெய்னாவை 4-வது இடத்திலும், மூன்றாவது இடத்தில் புதிய வீரராக மொயின் அலிக்கு வாய்ப்பு அளித்தது சென்னை அணிக்கு பெரிய அளவில் உதவியது. மேலும் பேட்டிங் ஆர்டரை மாற்றியதை மூலம் தற்போது சிஎஸ்கே அணி வலுவாக இருக்கிறது என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement