ஆசியக்கோப்பை 2022 : ரோஹித்துடன் ஓப்பனராக இறங்கும் வீரர் அவராகத்தான் இருக்கனும் – பார்த்திவ் படேல் பேட்டி

Parthiv-Patel
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

Asia-Cup

- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் சமீபத்தில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடும் பலருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு அவ்வப்போது வழங்கப்பட்டு துவக்க வீரர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். எனவே ஆசிய கோப்பை தொடரில் எந்த இருவர் துவக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் ஆசியக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் கூறியுள்ளார்.

Rohith-1

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : என்னுடைய விருப்பப்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆசிய கோப்பை தொடரில் துவக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனெனில் விராட் கோலி சமீபகாலமாகவே பார்ம் இன்றி தவித்து வருவதாலும் சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டு வருவதாலும் அவருக்கு களத்தில் நின்று விளையாட காலஅவகாசம் தேவை.

- Advertisement -

எனவே அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கோலியின் திறன் என்ன என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவரால் எப்படி வேண்டுமானாலும் சிறப்பாக விளையாட முடியும். நிச்சயம் அவர் துவக்க வீரராக களம் இறங்கினால் அந்த தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதோடு மூன்றாவது வீரராக களமிறங்கினால் சூழலுக்கு ஏற்றார் போல் விளையாட வேண்டிய அவசியமிருக்கும்.

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – விவரம் இதோ

அதே வேளையில் துவக்க வீரராக அவர் களமிறங்கும் பட்சத்தில் இன்னும் சுதந்திரமாக பெரிய பெரிய ஷாட்டுகளை விளையாடி பெரிய இன்னிங்ஸ்சாக மாற்ற முடியும். எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement