பாகிஸ்தான் அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த – பார்த்திவ் பட்டேல்

parthiv
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி தங்களது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pak

- Advertisement -

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனையும் உத்தேசமாக கணித்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் :

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் இறங்கலாம். அதேபோன்று மூன்றாவது இடத்தில் கோலியும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் விளையாடலாம். மேலும் ஐந்தாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 6 ஆவது வீரராக ஹார்டிக் பாண்டியா விளையாடலாம். பாண்டியா பந்துவீச இல்லை என்றாலும் நிச்சயம் டெத் ஓவர்களில் போட்டியை முடிக்கக் கூடிய மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்பதால் அவர் அணியில் விளையாடுவது அவசியம்.

Pandya
Pandya IND

அதனைத் தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களும் விளையாடலாம். 5வது பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் அல்லது புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -

Bhuvi

தற்போதைய சூழலில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு சற்று மோசமாக இருந்தாலும் அனுபவ வீரர் என்பதால் முதல் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஏதேனும் ஒரு பவுலர் சொதப்பினால் கூட ஷர்துல் தாகூர் நிச்சயம் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அணியின் 4 ஆவது பேட்ஸ்மேனாக இவரே விளையாடனும். அதுதான் கரெக்ட் – சல்மான் பட் ஓபன்டாக்

பார்த்திவ் பட்டேல் கணித்த இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ராகுல் சாஹர், 9) முகமது ஷமி, 10) பும்ரா, 11) புவனேஷ்வர் குமார் / ஷர்துல் தாகூர்

Advertisement