இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாப்பிரிக்கா அணியின் சவாலை சமாளித்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் அத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் கணித்துள்ளார். அதில் 6வது இடத்துக்கு விளையாட நித்திஷ் ரெட்டி மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருக்கிடையே போட்டி நிலவும் என்று அவர் கிடைத்துள்ளார். ஏனெனில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டியில் துருவ் ஜுரேல் 2 சதங்கள் அடித்து அசத்தினார்.
இந்திய லெவன்:
அதனால் ரிஷப் பண்ட் கீப்பராக விளையாடினாலும் துருவ் ஜுரேல் பேட்ஸ்மேனாக விளையாடத் தகுதியானவர் என்று அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் 3வது வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதால் நிதிஷ் ரெட்டி விளையாடுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பார்த்தீவ் பட்டேல் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்குவார்கள்”
“3, 4, 5வது இடங்களில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவார்கள். 6வது இடம் மட்டுமே யோசிக்க வேண்டியுள்ளது. மற்றபடி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் விளையாடுவார்கள். எனவே 6வது இடத்தில் நிதிஷ் ரெட்டி அல்லது துருவ் ஜுரேல் ஆகியோரில் யார் விளையாடுவார்கள் என்பது மட்டுமே இந்திய அணியின் கேள்வியாகும்”
6வது இடத்துக்கு போட்டி:
“கொல்கத்தாவில் தற்சமயத்தில் குளிர்ச்சியான சூழ்நிலைகள் நிலவும் என்பதால் நித்திஷ் ரெட்டி 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவாரா? அப்படி செய்தால் நீங்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களை விளையாடலாம். கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் துருவ் ஜுரேல் ரன்கள் அடித்துள்ளார். ஒருவேளை நீங்கள் ஆல் ரவுண்டரை விரும்பினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது”
இதையும் படிங்க: தெ.ஆ டெஸ்ட் துவங்க இன்னும் 4 நாள் தான் இருக்கு.. அதற்குள் முகமது சிராஜுக்கு ஏற்பட்ட பின்னடைவு – விவரம் இதோ
“அதே சமயம் இந்த இந்திய அணி நிர்வாகம் அவரை முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் 2024 பெர்த் டெஸ்ட் போட்டியில் அவரை பேட்ஸ்மேனாக விளையாட வைத்தனர். அதன் பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்தியாவுக்காக பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் வாய்ப்புக்கு கூட அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



