அவருக்கான 2024 டி20 உ.கோ டிக்கெட் பிரிண்ட் ஆகுது.. இளம் வீரரை பாராட்டிய பார்த்திவ் பட்டேல்

Parthiv Patel 2
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற வரும் டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் 3வது போட்டியிலும் வென்று 3 – 0 என்ற கணக்கில் இத்தொடரில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக இந்த தொடரில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவும் போராடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 309 ரன்களை 156.06 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக போட்டியை ஃபினிஷிங் செய்யக்கூடியவராக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

உலகக் கோப்பை டிக்கெட்:
அதனால் இந்தியாவுக்காக தேர்வான அவர் இதுவரை விளையாடிய 7 டி20 இன்னிங்ஸில் 100 ரன்களை 147.05 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். குறிப்பாக அரை சதம் போன்ற தன்னுடைய சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் களமிறங்கியது முதலே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவருடைய ஸ்டைல் ஐபிஎல் தொடரின் போதே சேவாக் பீட்டர்சன் போன்ற முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான டிக்கெட் அச்சிடப்பட துவங்கியுள்ளதாக முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “லோயர் ஆர்டரில் வந்து அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் தான் தற்போது இந்திய அணிக்கு தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அது போன்ற இடத்தில் விளையாட உங்களுக்கு அடித்து நொறுக்கக் கூடிய பேட்ஸ்மேன் தேவை. ஜித்தேஷ் சர்மா விளையாடும் விதத்திற்கு அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்று நான் கருதுகிறேன். அதனால் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கான அவரின் டிக்கெட் பிரிண்ட் செய்ய துவங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 3வது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள திட்டத்தை வெச்சுருக்கோம்.. ஆப்கானிஸ்தான் கோச் பேட்டி

“இதுவரை விளையாடியது குறைவாகவே இருந்தாலும் இத்தொடரின் முதல் போட்டியில் 10வது ஓவருக்கு முன்பாக அவர் பேட்டிங் செய்ய வந்தார். அதில் சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர் அதற்கு தகுந்தார் போல் விளையாடியதாக நான் உணர்ந்தேன். அப்போட்டியில் நிதானமாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாட வேண்டிய நிலையில் களமிறங்கிய அவர் அந்த வேலையை சரியாக செய்தார். அந்த வகையில் தம்மால் நிலையாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைக்க முடியும் என்பதையும் அவர் காண்பித்தார்” என கூறினார்.

Advertisement