உனது அணியில் உன்னை தவிர அனைவரும் உயரமானவர்கள். ஆஸி வீரரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த – பார்திவ் பட்டேல்

Parthiv
- Advertisement -

13 ஆவது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான பெங்களூரு அணியில் துவக்க வீரராக இந்தியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென் பார்த்திவ் பட்டேல் தக்க வைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டும் அவர் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பெங்களூர் அணியின் புதிய துவக்க வீரராக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பின்ச் குறித்தும் பார்த்திவ் பட்டேல் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் பெங்களூரு அணியில் ஆரோன் பின்ச் உடன் தொடக்க வீரராக களமிறங்க இருப்பது பார்திவ் பட்டேல்க்கு கிடைத்த அதிர்ஷ்டம். இனிமேல் உங்களுக்கு எல்லாம் எளிதாக இருக்கும். உங்களை விட பின்ச் உயரமானவர். அவர் மட்டுமல்ல நிறைய வீரர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட பார்த்தீவ் பட்டேல் அவருக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

ஆரோன் பின்ச் அற்புதமான வீரர் தான் அவருடன் இணைந்து விளையாட விரும்புகிறேன். ஆனால் அவர் உங்களைப்போல கிடையாது. ஆஸ்திரேலியாவில் அதிக நேரம் இருக்கிறார் இந்த நேரத்திலாதாவது வீட்டிற்கு போகிறீர்களே கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் என்று கிண்டலாக பதில் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement