இதைவிட நல்ல சேன்ஸ் கிடைக்காது யூஸ் பண்ணிக்கோங்க. விராட் கோலிக்கு அறிவுரை வழங்கிய – பார்த்திவ் பட்டேல்

Parthiv
- Advertisement -

ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோத உள்ளது. முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் சுவாரசியம் பெறவேண்டும் என நடத்தப்பட்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இந்த போட்டி குறித்தும், கேப்டன் விராட் கோலி குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட துவங்கியதிலிருந்து விராட் கோலி ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு குறை மட்டுமே அவரிடம் உள்ளது. இதன் காரணமாக அந்த குறையை அவர் போக்கிக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுக் கொடுத்துவிட்டால் கோலியின் கேப்டன்சிக்கு இந்த வெற்றி ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.

Kohli

அதுமட்டுமின்றி இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய கேப்டன் என்ற முறையில் கோலி எப்போதும் உற்றுநோக்கப்படுவார். எனவே இந்த கோப்பையை கோலி வென்றே ஆகவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தத் தொடரின் போது பல்வேறு காரணம் காரணமாக நடுவில் விதி முறைகள் மாற்றப்பட்டன.

IND

புள்ளிவிவரங்களும் மாற்றப்பட்டன ஆனாலும் இந்திய அணி உறுதியாகப் போராடி தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. எனவே எப்படியாவது இந்த கோப்பையை வென்று தனது கேப்டன்சி மீதுள்ள குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement