- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவரை மாதிரி பவுலர் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய – பராஸ் மாம்ப்ரே

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 52 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அவர் இதுவரை 158 ஆட்டங்களில் விளையாடி 187 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய பராஸ் மாம்ப்ரே :

மூன்று வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் பும்ரா காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக தற்போது முக்கிய தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் இன்றளவும் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை அவரே தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவை போன்று சிறப்பான பந்துவீச்சாளர்கள் கிடைப்பது மிக கடினம் என்றும் அவர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அற்புதம் என்றும் முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா தனது கரியரை ஆரம்பித்ததில் இருந்து முழு கவனத்துடன் உழைத்து வருகிறார். ஒரு பவுலராக அவர் முன்னேறிய விதம் மிக அற்புதமானது. ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய நிறை குறைகளை அறிந்து தொடர்ச்சியாக அவரது முன்னேற்றத்திற்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன் காரணமாகவே இன்று உலகில் நம்பர் 1 பவுலராக இருக்கிறார்.

அதோடு அவரது பயிற்சியும், அவரது கடின உழைப்பும்தான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இன்று அவர் சிறந்து விளங்க காரணம் என்று நினைக்கிறேன். இவரைப் போன்று போட்டியில் இம்பேக்ட் ஏற்படுத்தும் ஒரு பவுலர் கிடைப்பது மிகக்குறைவு தான். அதிலும் குறிப்பாக மூன்று வகையான போட்டிகளிலும் இவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் இவங்க 2 பேருக்கும் சரியான வாய்ப்பு கிடைக்கல – சீக்கா ஸ்ரீகாந்த் ஆதங்கம்

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய புள்ளி விவரங்களை பார்த்தாலே இவரது தாக்கம் என்ன? என்பது உங்களுக்கு புரியும். இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்ப்ரீத் பும்ரா தான் என்று என்னால் உறுதியாக கூற முடியும் என பும்ராவை பாராட்டி பராஸ் மாம்ப்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -