- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 – 5 அடியில் இதை செய்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளூரில் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காரு.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் மேட்ச் வின்னராக அறியப்படுகிறார். முன்னதாக மற்ற பவுலர்களைப் போல் அல்லாமல் பும்ரா மிகவும் குறைந்த தூரம் ஓடி வந்து வித்தியாசமாக பந்து வீசும் ஆக்சனை கொண்டுள்ளார்.

அதனால் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது என்ற பேச்சுக்கள் காணப்பட்டன. அத்துடன் காயமடைக்கும் போதெல்லாம் இவரால் நீண்ட காலம் நிலைத்து விளையாட முடியாது என்ற பேச்சுக்கள் காணப்படுவது வழக்கமாகும். ஆனால் அதே ஆக்சனை வைத்து 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் பும்ரா தற்போது நம்பர் ஒன் பவுலராக முன்னேறி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

கடின உழைப்பு:
இந்நிலையில் வெறும் 4 – 5 அடிகள் நடந்து வந்து துல்லியமாக பந்து வீசுவதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளூர் கிரிக்கெட்டில் பல வருடங்கள் கடினமாக உழைத்ததாக பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “திறன் அடிப்படையில் பும்ரா விசித்திரமானவர். ஒரு பவுலராக இதை நீங்கள் பார்க்கும் போது அது டெக்னிக்கல் அளவிலானது”

“ஏனெனில் அவர் ஓடி வந்து அந்த வேகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் பும்ராவை பார்த்தால் அதிகமாக நடந்து வருகிறார். அவர் அதிகமாக ஓடுவது கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். குறிப்பாக 4 – 5 அடிகள் நடந்து வந்து அவர் பந்தை வெளியிடுகிறார். இருப்பினும் தற்போது அவர் தனது ரன் அப்பில் கொஞ்சம் நீளத்தை அதிகரித்துள்ளார். அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நீங்கள் அவரிடம் 4 – 5 அடிகள் நடந்து வந்து முழு வேகத்தில் வீசச் சொன்னால் பும்ரா அதை செய்வார்”

- Advertisement -

இதையும் படிங்க: மினி ஐபிஎல் தொடரில் உங்களை ஜாலியாக வெளுக்கப் போறேன்.. இஷாந்த் சர்மாவுக்கு ஆயுஷ் படோனி சவால்

“ஏனெனில் இயற்கையாகவே பிறப்பில் அவரிடம் அந்தத் திறன் இருக்கிறது. ஆனால் அவர் அதை ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் நிறைய விளையாடி கடினமாக உழைத்து வளர்த்துள்ளார். அவர் தனது உடலை மீண்டும் மீண்டும் சோதித்துள்ளார். அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் தன்னுடைய திறமைகளை தேர்ச்சியடைய வைத்துள்ளார். அந்த அனுபவத்தாலேயே தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -