மினி ஐபிஎல் தொடரில் உங்களை ஜாலியாக வெளுக்கப் போறேன்.. இஷாந்த் சர்மாவுக்கு ஆயுஷ் படோனி சவால்

Ayush Badoni
- Advertisement -

ஐபிஎல் டி20 தொடர் கோடைகாலத்தில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கமாகும். அந்த தொடரால் நிறைய இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு நாளடைவில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். அதைப் பார்த்து சமீபத்திய வருடங்களில் நிறைய மாநில கிரிக்கெட் வாரியங்கள் புதிய டி20 தொடர்களை நடத்தி வருகின்றன.

எடுத்துக்காட்டாக தமிழ்நாடு வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரை சொல்லலாம். 2016இல் துவங்கப்பட்ட அந்தத் தொடரில் இந்த வருடம் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் டிபிஎல் டி20 தொடர் துவங்கப்பட்டுள்ளது. டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் நடைபெற உள்ள அந்தத் தொடரை கடந்த வாரம் சேவாக் அறிமுகப்படுத்தினார்.

- Advertisement -

சீனியருக்கு சவால்:
வரும் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் அந்தத் தொடரில் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, பழைய டெல்லி ஆகிய 6 அணிகள் விளையாட உள்ளன. அதில் தெற்கு டெல்லி அணிக்காக இளம் வீரர் ஆயுஸ் படோனி விளையாட உள்ளார். இதுவரை 62 டி20 போட்டிகளில் 977 ரன்கள் குவித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 42 போட்டிகளில் 634 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்தத் தொடரில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவை சிக்ஸர்களாக அடிக்கப் போவதாக ஆயுஷ் படோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டிபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பை கொடுக்கிறது. என்னைப் பொறுத்த வரை இதில் மினி ஐபிஎல். இதில் விளையாடுவது என்னைப் போன்ற டெல்லி வீரர்களுக்கு வாய்ப்பையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்”

- Advertisement -

“டெல்லி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடுவதற்கு பெயர் போனவர்கள். எனவே போட்டி மிகுந்த தொடராக இருக்கப் போகும் டிபிஎல் ரசிகர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். இத்தொடரில் இஷாந்த் சர்மாவுக்கு எதிராக விளையாடுவது தான் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. அவர் என்னை அவுட்டாக்குவேன் என்று சொல்வார். நான் உங்களை சிக்சர் அடிப்பேன் என்று சவால் விடுவேன்”

இதையும் படிங்க: ஒலிம்பிக்கால் பாக்கல.. அவர் இல்லாததால் இந்திய அணியை இலங்கை தோற்கடிச்சுட்டாங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

“எனவே அவருக்கு எதிராக விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். தெற்கு டெல்லி அணிக்காக வாங்கப்பட்டதும் எங்கள் கேப்டன் ஷிகர் தவான் தொடர்ச்சியாக என்னை அழைத்து தயாராகும் முறைகள் பற்றி பேசினார். அவருடைய தலைமையில் இத்தொடரில் விளையாடி கோப்பையை வெல்வதற்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement