அடேங்கப்பா இந்த அணியும் டி20 உலகக்கோப்பையில் விளையாடப்போகுதா ? – விவரம் இதோ

PNG
- Advertisement -

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்காக முன்னணி அணிகள் தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் கடைநிலை அணிகளுக்கு இடையே நடந்து வருகின்றன.

PNG 1

- Advertisement -

இதில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு இந்த தகுதி போட்டியில் விளையாடி வந்தது இந்நிலையில் உலக கோப்பையில் விளையாட புது அணியாக பப்புவா நியூ கினியா என்ற அணி தற்போது தகுதி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் கிடைத்த புள்ளிகள் மூலம் தற்போது அந்த அணி உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த அணி தகுதி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த அணியை வாழ்த்தி ட்வீட் ஒன்றினையும் செய்துள்ளார். ஏற்கனவே சில சர்வதேச போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் மிக பெரிய பலமான அணிகளை அவர்கள் சந்திக்க இருப்பதால் எந்த அளவிற்கு அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தெரியாது.

PNG 2

மேலும் ஒரு சில போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றால் கூட அந்த அணிக்கு பெருமைதான் என்றே கூறலாம். ஆனால் இந்த தொடரில் பங்குபெற இருப்பதே அவர்களுக்கு பெருமை தான்.

Advertisement