பலமான மும்பை அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு இவரே காரணம் – பண்ட் புகழாரம்

pant

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் அடித்தது.

sky

அதிகபட்சமாக ரோகித் சர்மா 44 ரன்களும், இஷான் கிஷன் 26 ரன்களையும் அடித்தனர். டெல்லி அணி சார்பாக அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன் பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் நேற்று பேட்டி முடிந்ததும் வெற்றி குறித்து பேட்டியளித்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : நாங்கள் களம் இறங்கும் போது எங்களுக்கு இது புதிய மைதானம் என்பதால் சிறிது பிரௌசரில் தான் இருந்தோம். அதுமட்டுமின்றி துவக்கத்திலேயே ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி வலுவாக இருந்தது.

mishra

அப்பொழுதுதான் அமித் மிஸ்ரா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை போட்டிக்குள் கொண்டுவந்தார். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு 137 ரன்களுக்கு சுருட்டியது சிறப்பான ஒன்று. அதன் பின்னர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ளோம். லலித் யாதவ் ஒரு சிறப்பான வீரர்தான் அவரை குரூம் செய்து வருகிறோம். இனிவரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

- Advertisement -

mishra

சென்னை மைதானத்தை புரிந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் நாங்கள் கற்றுக்கொண்டு விடயம் என்னவெனில் இது போன்ற மைதானங்களில் விக்கெட்டுகள் கையில் இருந்தால் எந்த ஒரு இலக்கையும் சேசிங் செய்து வெற்றி பெறலாம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.