SRH vs DC : கடைசி ஓவரின் ஒரு பந்தை கூட நான் கண் திறந்து பார்க்கவில்லை – பண்ட்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Pant
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

இந்த போட்டியின் கடைசி ஓவர் குறித்து பேசிய பண்ட் கூறியதாவது : நான் கடைசி ஓவரின் ஒரு பந்தினை கூட நான் கண் திறந்து பார்க்கவில்லை. அதற்கு காரணம் யாதெனில் போட்டியை முடித்து வைத்து வரவேண்டிய வேளையில் கடைசி நேரத்தில் இலக்கினை அருகில் வைத்து தேவையில்லாமல் ஷாட் ஆடி வெளியேறினேன். இதனால் மிகுந்த மனக்கஷ்டம் ஏற்பட்டது.

pant-2

அதோடு பதட்டமும் தொற்றி கொண்டது. வெற்றி பெற்றுவிடுவோம் என்று தெரியும் இருப்பினும் பயம் கலந்த பதட்டத்துடன் போட்டியை பார்க்க கூடாது என்று கடைசி ஓவரின் ஒரு பந்தை கூட நான் பார்க்க விரும்பவில்லை. மேலும், வெற்றிக்கான பவுண்டரி அடித்து அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடிய பின்னரே கண் திறந்தேன் என்று பண்ட் கூறினார்.

Advertisement