கோலி, ரோஹித்தை விட தோனிக்கு இந்த விடயத்தில் மூளை அதிகம். எனக்கு சரியான பாட்னர் அவர்தான் – பண்ட் ஓபன் டாக்

- Advertisement -

ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். டோனியின் இடத்தை இவர்தான் ஏற்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் தொடரிலும் உள்ளூர் தொடரிலும் ருத்ர தாண்டவமாடும் இவர் சர்வதேச போட்டிகளை தற்போது வரை பெரிதாக தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்கவில்லை.

Pant 1

- Advertisement -

ஆனால் இவரது அதிக திறமை காரணமாக இந்திய அணி இவரை நம்பி இன்னும் அணியில் வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரில் யாருடன் இவருக்கு பேட்டிங் பிடிக்க பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்…

நான் தோனியுடன் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதிகமாக அவருடன் டேட்டிங் பிடித்ததில்லை. அவர் களத்திற்குள் இருந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அவர் ஒரு திட்டம் தீட்டினால் அந்த திட்டத்தை நாம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.

dhoni with pant

அவருடைய மூளை அற்புதமாக வேலை செய்யும் குறிப்பாக சேஸ் செய்யும்போது மிகவும் திறமையாக அணியை வழிநடத்துவார் என்று கூறியுள்ளார் ரிஷப் பண்ட் , இவர் இந்திய அணிக்காக தற்போது வரை 13 டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒருநாள் போட்டிகளிலும் 28 டி20 போட்டிகளிலும் ஆடி கிட்டத்தட்ட 1500+ ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் 2 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும்.

சமீபகாலமாக பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வரும் பண்டிற்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் இளம்வீரர் என்பதினாலும், அவர் மீது அணி நிர்வாகத்தினர் வைத்திருக்கும் அபார நம்பிக்கை காரணமாகவும் அவர் அணியில் இருந்து நீக்கப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement