CSK vs DC : ரெய்னாவிடம் வம்பிழுத்த ரிஷப் பண்ட். ஏன் அப்படி செய்தார் தெரியுமா ? – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Pant
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியில் ரெய்னா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 9 ஓவர் முடிந்து இடைவேளை விடப்பட்டது. அந்த இடைவேளை முடிந்து ரெய்னா பேட்டிங் செய்ய வந்தபோது அவரை ஜாலியாக வழிமறித்தார் டெல்லி அணியின் கீப்பர் பண்ட். தொடர்ந்து கிரீஸை நோக்கி சென்ற ரெய்னாவை தொடர்ந்து ஜாலியாக வழிமறித்தார் பண்ட். பண்ட்டின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த விடியோவை கண்ட சென்னை ரசிகர்கள் ரெய்னாவிடம் வேண்டுமென்றால் இதுபோன்ற விடயங்களை வைத்துக்கொள்ளுங்கள் தோனியிடம் வைத்துக்கொண்டால் அவ்வளவுதான் என்று கமெண்ட் சித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற சிறுபிள்ளை தனத்தால் தான் உங்களுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் சாதாரணமாக அவருடன் பழகி மகிழவே பண்ட் அப்படி செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை என்பதே எங்களின் கணிப்பு.

Advertisement