
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றன.
மூன்று நாள் கொண்ட இந்தப் பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்களும் நியூசிலாந்து அணி 235 ரன்கள் குறித்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் குவித்தது. இதனால் மூன்று நாள் போட்டி பயிற்சி கொண்ட இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால், பண்ட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மயங்க் அகர்வால் 81 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பண்ட் 65 பந்தில் 4 சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டுகள் உதவியுடன் 70 ரன்களை குவித்தார்.
நீண்ட நாட்களாக பேட்டிங்கில் சொதப்பிய வந்த பண்ட் இந்த போட்டியின் மூலம் பார்முக்கு திரும்பினாலும் அவர் அடித்த இந்த இரண்டு போனது என்று கூறலாம் ஏனெனில் போட்டி டிராவில் முடிந்தது மட்டுமின்றி முதல் போட்டியில் சாதித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உள்ளதால் அவரது இந்த ஆட்டம் வீண் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.