இதனை கற்று கொண்டு வருவதால் என்னால் சிறப்பாக ரன் குவிக்க முடிகிறது – ஆட்டநாயகன் பண்ட்

Pant
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

- Advertisement -

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பண்ட் பேசியதாவது :

ஒவ்வொரு போட்டியிலும் நாம் ரன் குவித்து நம் அணி வெற்றிபெறும்போது அது நமக்கு அதிகமான மகிழ்ச்சியினை தரும். நான் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டே வருகிறேன். அதன் மூலமே என்னால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடிகிறது. நான் எப்போதும் ஆட்டத்தின் சூழ்நிலையினை புரிந்தே ஆடுகிறேன்.

dc

இந்த போட்டியில் நான் இறங்கியதும் அணிக்கு மிகப்பெரிய ரன்களை அடிக்க வேண்டும், எதிரணிக்கு பெரிய இலக்கினை நிர்ணயிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆடினேன். மைதானமும் என்னுடைய ஆட்டத்திற்கு ஒத்துழைத்தது. இதனாலே என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று பண்ட் கூறினார்.

Advertisement