DC vs KKR : இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக பண்ட் இதனை செய்தே ஆக வேண்டும் – பாண்டிங்

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Ponting
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Iyer

இந்த போட்டிக்கான டெல்லி அணியின் திட்டம் குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் கொல்கத்தா அணியை அவர்களது மைதானத்தில் எங்கள் அணி நிச்சயம் வீழ்த்தும். மேலும், இனி வரப்போகும் ஒவ்வொரு ஆட்டங்களிலும் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெரும்.

- Advertisement -

மேலும், இன்றைய போட்டியில் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கத்தினை கொடுக்கும் பட்சத்தில் பண்ட்டை போட்டியின் இரண்டாம் பாதியில் களமிறக்க திட்டமிட்டுளோம். ஏனெனில், கடைசி நான்கு ஓவர்களை அவர் டார்கெட் செய்து அடித்தால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என்பதே எனது கருத்து.

Pant 1

மேலும், பண்ட் இந்தியாவின் அனைத்து மைதானத்திலும் எளிதாக சிக்ஸ் அடிக்க கூடிய வீரராவார். அவரிடம் உள்ள திறமையும், அதிரடியும் அணிக்கு நல்லதே. மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தற்போது டெல்லி அணி சிறப்பாக இருப்பதால் இன்று கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றிபெறும் என்று பாண்டிங் கூறினார்.

Advertisement