பண்டிற்கு பதிலாக கீப்பிங் செய்து வரும் ராகுல். என்னாச்சு பண்டிற்கு ? – காரணம் இதுதான்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 74 ரன்களை குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் 33 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் குவித்தார். இறுதியில் அவர் 43.2 ஆவது ஓவரில் 28 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் பேட்டில் பட்ட பந்து பலமாக அவரது ஹெல்மெட்டில் தாக்கியது இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறிய பண்ட் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதனால் தற்போது விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

மேலும் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட தகவலில் அவரது காயத்தின் தன்மையை ஆராய்வதற்காகவும், எச்சரிக்கை காரணமாகவும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய அனுமதிக்கப்படாமல் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement