மாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 11.4 ஓவர்களில் 135 ரன்கள் குவித்தது.

இந்த சிறப்பான துவக்கத்தினால் சென்ற முறை மூன்றாவது வீரராக துபேவை களம் இறக்கியது போல் இந்த முறை பண்டிற்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய வாய்ப்பு கொடுத்தார் கோலி ஏனெனில் கடந்த பல போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் பண்டிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுத்து அவர் சிறப்பாக விளையாடினால் அவரின் ஆட்டம் முன்னேற்றம் அடையும் என்ற எண்ணத்தோடு கோலி அவரை முன்கூட்டி இறங்கினார்.

Pant

ஆனால் பாவம் பண்டின் விதி அவரை துரத்துகிறது என்கிற படி பரிதாபமான முறையில் 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஏற்கனவே அவர் சிறப்பாக விளையாடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பண்ட் முக்கியமான இறுதிப் போட்டியிலும் இரண்டு பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது வரை இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement