சைனி மீது கடுப்பாகி மைதானத்திலேயே கோவப்பட்ட பண்ட். போட்டியில் நடந்தது என்ன ? – விவரம் இதோ

Saini
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.

dc

இந்நிலையில் நேற்றைய போட்டியில் வழக்கத்தைவிட சில ரன்களை அதிகமாக வழங்கிய சைனி 14ஆவது ஓவரின் 5-வது பந்தை ஸ்டாயினிஸ்க்கு எதிராக நேராக மார்பளவில் பீமர் வீசினார். அந்த பந்து 145 வேகத்தில் அவரது நெஞ்சினை நோக்கி சென்றது. உடனே அந்தப் பந்தை தடுக்க முயன்ற ஸ்டாய்நிஸ் கைகளில் அடி வாங்கி தடுத்தார். இருப்பினும் இப்படி ஒரு மோசமான பந்து வீசி விட்டோம் என்று அவரிடம் சைனி மன்னிப்பும் கேட்கவில்லை. பந்து வீசி விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

Stoinis_saini

இந்நிலையில் இதனை கவனித்த ரிஷப் பண்ட் சைனியை நோக்கி கோபமாக சாரி கூட சொல்ல முடியாதா ? என்ற பாவனையை காண்பித்தார். அதன் பிறகு ஒரு பந்து வீசி விட்டு சைனி ஸ்டாய்னிசை நோக்கி பாவனையில் சரி கேட்டார். அதற்கு பிறகு சைனியின் ஓவரை டெல்லி வீரர்கள் பிரித்து எடுத்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் மட்டும் சைனி 3 ஓவர்களில் 48 ரன்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement