பண்ட் கொடுத்த ஐடியா. தோனியை டக் அவுட் ஆக்கிய ஆவேஷ் கான் – வெளியான சுவாரசிய தகவல்

avesh-khan
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் இந்தியாவில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் டெல்லி அணி சார்பாக விளையாடிய இளம் வீரர் ஆவேஷ் கான் தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் இந்த தொடரில் விளையாடிய பல இளம் வீரர்களை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆவேஷ் கானின் சிறப்பான பந்து வீச்சு குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் விளையாடி ஆவேஷ் கான் முதல் போட்டியின்போது தோனியின் விக்கெட்டை எடுக்க உதவிய பண்ட் உதவியது குறித்து தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : ஆட்டத்தின் சில ஓவர்கள் மட்டுமே அப்போது மீதமிருந்தது இதன் காரணமாக தோனி வந்ததிலிருந்தே அடித்து ஆடுவார் என்று கேப்டன் ரிஷப நினைத்தார். மேலும் அவர் என்னிடம் வந்து நீ பந்தை ஷாட் பாலாக போடு என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார்.

Avesh

பிறகு நானும் அதையே செய்தேன். அவர் கூறியது போலவே தோனி அடுத்த அடித்து ஆட முயன்று இன்சைட் எட்ஜ் ஆகி அவுட் ஆனார் என்று ஆவேஷ் கான் பண்ட் கொடுத்த யோசனையை கூறினார். மேலும் தோனி கிரிக்கெட் விளையாடி நீண்ட நாட்கள் ஆனதால் அவரால் துவக்கத்திலேயே அடித்து ஆடுவது கஷ்டம் என்பதால் பண்ட் இந்த யோசனையை அவரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பேசிய அவர் :

avesh

எனக்கும் கேப்டன் ரிஷப் பண்ட்க்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. நான் பந்துவீசும் போது அவரைக் கவனித்துக் கொண்டே இருப்பேன். அவர் யார்க்கர் போட சொன்னாலும் சரி, அவுட் சைட் ஆப் திசையில் போட சொன்னாலும் சரி அல்லது ஷார்ட் பிட்ச் போல சொன்னாலும் சரி ஒரு உடல் மொழியின் மூலம் எனக்கு அதை உணர்த்துவார். அதன்படி நான் சரியாக பந்து வீசுவேன் என ஆவேஷ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement