- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவரெல்லாம் தோனிக்கு மாற்று வீரரா ? பண்டிற்கு பதிலாக இவரை அணியில் சேருங்கள் – வலுக்கும் எதிர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2 டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் இரண்டு போட்டிகளிலும் சொதப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து இவ்வாறு சொதப்பலாக ஆடும் பண்ட் எவ்வாறு தோனியின் மாற்று வீரராக இருக்க போகிறார் என்று புரியவில்லை என்றும் ரசிகர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். மேலும் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மேலும் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ராகுலை அணியில் சேருங்கள். பண்ட்டை விட ராகுல் சிறப்பாக ஆடுவார். ராகுல் தொடர்ந்து டி20 போட்டியில் சிறப்பாக ஆடி வருவதால் அவரை அணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டாம்.

விரைவில் அவரை அணியில் சேருங்கள் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது, அதிரடி வீரரான பண்ட் நிலைத்து நின்று ஆடினால்தான் அணியில் நீடிக்க முடியும்.

- Advertisement -
Published by