பிரவீன் ஆம்ரேவை மைதானத்திற்குள் அனுப்பியது தப்பு தான். ஆனா ஏன் அப்படி பண்ணேன் தெரியுமா? – பண்ட் விளக்கம்

Amre
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 34-வது லீக் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் குவிக்க 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. அப்போது போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் ரோவ்மன் பவல் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசினார். அந்த கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்ட போதுதான் போட்டியில் ஒரு பெரிய பிரளயம் ஏற்பட்டது என்று கூறலாம்.

amre 1

- Advertisement -

ஏனெனில் அந்த ஓவரின் 3-வது பந்தை சந்தித்த பவல் இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ் பந்தை சிக்ஸர் அடித்தார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர்கள் யாரும் அதற்கு நோபால் என்று தெரிவிக்கவில்லை. அதோடு மூன்றாவது பெரும் கவனத்திற்கும் அந்த விடயத்தை கொண்டு செல்லவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த டெல்லி அணி வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவருமே பவுண்டரி லைனில் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வீரர்களை உள்ளே வரும்படி சைகை செய்தார். அதனை தொடர்ந்து டெல்லி அணியின் துணை பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரேவை அவர் மைதானத்திற்குள் அனுப்பி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் இறுதியில் அம்பயர்களின் முடிவே உறுதியானதால் அந்த பால் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டதோடு டெல்லி அணி தோல்வியையும் சந்தித்தது.

amre 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த சம்பவம் குறித்து பேசியிருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் முழுவதுமே சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனாலும் ராவ்மன் பவல் இறுதியில் எங்களுக்காக ஒரு வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அந்த பந்து நோபால் கொடுத்து இருக்க வேண்டியதுதான். ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. அம்பயரின் முடிவு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

நாங்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் அதிர்ப்தி அடைந்தோம். 3-வது அம்பயர் நிச்சயம் இந்த நோபால் பரிசோதனையில் ஈடுபட்டிருக்க வேண்டும். நான் பிரவீன் ஆம்ரேவை மைதானத்திற்குள் அனுப்பியது தவறு தான். ஆனாலும் என்ன செய்வது இது போன்ற முக்கியமான போட்டிகளில் அதுவும் அனல் பறக்கும் வேளையில் இந்த சம்பவம் இயற்கையாகவே நிகழ்ந்து விட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றின் மிகசிறந்த பினிசெர் யார் – புள்ளிவிவரத்துடன் கூடிய டாப் 4 பினிஷெர்களின் – லிஸ்ட் இதோ

இந்த தொடர் முழுவதுமே அம்பயர்களிடம் சில தவறுகள் இருந்து வருகிறது. 200 ரன்களுக்கு மேல் நாங்கள் துரத்தும்போது இவ்வாறு ஒரு தவறான முடிவு அம்பயர்களின் பக்கம் இருந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தனது வருத்தத்தை ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement