SRH vs DC : ரன் அவுட் நியமானதுதான். பேட்ஸ்மேன் செய்ததுதான் தவறு – பண்ட்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Hooda
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

இந்த போட்டியில் 20 ஆவது ஓவரை கீமோ பவுல் வீசினார். அந்த ஓவரின் 5 ஆவது பந்தை சன் ரைசர்ஸ் அணியின் தீபக் ஹூடா எதிர்கொண்டார். அந்த பந்தை தவறவிட்ட ஹூடா ஒரு ரன் ஓட நினைத்து எதிர்புறம் ஓட முயற்சித்தார். ஆனால் பந்தை சரியாக பிடித்த பண்ட் அதை த்ரோ செய்ய அந்த பந்து ஹூடாவை தாண்டி சென்று ஸ்டம்பில் பட்டது.

- Advertisement -

Iyer

ஆனால், ஹூடா ரன் ஓடும்போது பவுலரின் மீது இடித்து பாதியிலே விழுந்தார். இதனால் பந்து அவரை தாண்டிச்சென்று ஸ்டம்பில் பட்டு அவுட் ஆனார். இதனால் இந்த விக்கெட் வேண்டுமா ? என்று அம்பயர் டெல்லி கேப்டன் ஐயரிடம் கேட்க ஐயர் பேட்ஸ்மேன் மீது தவறில்லை என்று நினைத்து விக்கெட் வேண்டாம் என்று கூறி அந்த இடத்தை விட்டு நடந்தார்.

hooda 2

ஆனால், அதனை கவனித்து கொண்டிருந்த பண்ட் ஹூடா மீதுதான் தவறு. பவுலர் மீது எந்த தவறும் இல்லை. ஹூடா பிட்ச் நடுவில் ஓடியது தவறு அதனால் இது ரன் அவுட் தான் என்று அம்பயரிடம் வாதிக்க இறுதியில் அம்பயர் ஹூடாவை அவுட் என்று கூறி வெளியேற சொன்னார். உடனே சோகமான முகத்தோடு ஹூடா வெளியேறினார்.

Advertisement