தோனியை போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய ரிஷப் பண்ட் – வீடியோ

Pant
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 44 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் வாட்சன். இவர் டெல்லி அணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பண்ட் மூலம் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பண்ட்டின் இந்த ஸ்டம்பிங் தோனியை நினைவுக்கு வரவைத்தது அந்த அளவிற்கு வேகமாக ஸ்டம்பிங் செய்தார் பண்ட் இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

Advertisement