ஸ்டம்பிங்கில் தோனியை கண்முன் நிறுத்திய பண்ட் – வைரலாகும் வீடியோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Pant 3

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான பண்ட் முதல் டி20 போட்டியில் செய்த ஸ்டம்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் போட்டியின்போது வெஸ்ட் வீரர் கிங் 31 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டு இருக்கும்போது 11 ஆவது ஓவரை ஜடேஜா வீசவந்தார். அந்த ஓவரின் முதல் பந்தினை ஏறிவந்து அடிக்க முயன்று பந்தினை தவறவிட்டார். உடனே அந்த பந்தினை சரியாக பிடித்த பண்ட் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசரவைத்தார்.

வழக்கமாக தோனி இதுபோன்று பலதடவை ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார். பண்டின் இந்த ஸ்டம்பிங் கிட்டத்தட்ட தோனியை நம் கண்முன் கொண்டுவந்தது என்றே நாம் கூறலாம். தொடர்ந்து கீப்பிங்கில் சொதப்பி வரும் பண்ட் கடந்த போட்டியில் செயல்பட்ட விதம் சற்று திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.