தோனியை தாண்டி 11 போட்டியிலேயே அபார சாதனை படைத்த பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

toss

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்கள் குவித்தது. ரஹானே அதிகபட்சமாக 74 ரன்களை குவித்தார்.

அதன்பின்னர் 468 குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

pant

இந்தப்போட்டியில் இளம் வீரரான பண்ட் ஒரு அறிய சாதனை ஒன்றை புரிந்தார். அந்த சாதனை யாதெனில் தற்போது தனது 11-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பண்ட் விக்கெட் கீப்பராக விரைவில் 50 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக வாய்ப்பு கிடைத்த பண்ட் தற்போது இந்த சாதனையில் அவரை கடந்துள்ளார். இந்த போட்டியில் பண்ட் இதுவரை மொத்தம் 4 வீரர்களை அவர் தனது கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement