இந்த தொடரில் சுமாராக செய்யப்பட்டாலே நீங்கள் ஓகே தான். திட்டம் போட்டு காய் நகர்த்தும் கோலி

Kohli

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி (இன்று) ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்த 3 டி20 போட்டியில் ராகுல் மற்றும் பண்ட் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர்கள் இருவர் மீதும் கோலி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். பண்டை விட ராகுல் சற்று திறமையான வீரர் என்று கூறலாம். ஏனெனில் ராகுல் டி20 போட்டிகளில் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். அதனால் ராகுல் இடம் தற்போது உறுதியாகியுள்ளது.

ஏனெனில் காயமடைந்த தவானுக்கு பதில் இந்த தொடர் முழுதும் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதால் சிறப்பாக ஆடி தனது இடத்தை உறுதி செய்வார். ஆனால் இந்த தொடரில் பண்ட் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதைப் பொருத்தே அவரது தேர்வு அமையும் ஏனெனில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அவரின் இடத்திற்காக பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Rahul

எனவே இந்த இந்த தொடரில் பண்ட் ஓரளவு சிறப்பாக ஆடி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். அவ்வாறு இரண்டு போட்டியில் சுமாராக விளையாடினால் கூட அவரது இடம் உறுதியாகும் மேலும் உலக கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் எந்தவித சர்ச்சையுமின்றி தேர்வு செய்யப்படுவார்கள். எனவேதான் இந்த தொடரிலும் கோலி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து திட்டமிட்டு மீண்டும் தேர்வுசெய்துள்ளார்.

- Advertisement -