இந்திய அணியில் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்த ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 282 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டியில் 17 விக்கெட்டுகள் அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாஹீர் கான் நேற்று முன்தினம் அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்தினை தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு டுவிட்டரில் ஜாஹீர் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
ஆனால் அதனை கொஞ்சம் கிண்டலாக பாண்டியா செய்துள்ளார். அது யாதெனில் ஜாஹீர் கான் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸர் வீடியோ ஒன்றினை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் இந்த ஷாட்டை போலவே அதிரடியாக உங்களது பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
Happy birthday Zak … Hope you smash it out of the park like I did here ????????❤️❤️ @ImZaheer pic.twitter.com/XghW5UHlBy
— hardik pandya (@hardikpandya7) October 7, 2019
ஆனால் அவரது இந்த வீடியோவை கண்ட இந்திய ரசிகர்கள் கோபமாக பாண்டியாவை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஏனெனில் இவ்வளவு சிறப்பான பந்து வீச்சாளருக்கு உங்கள் வாழ்த்துக்களை இந்த விதத்தில் பதிவிட்டது தவறான விடயமாகும். மேலும் இப்படி ஜாஹீர் கானை மரியாதை இல்லாமல் வாழ்த்த உங்களுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று பாண்டியாவை சமூக வலைத்தளத்தில் இந்திய ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.