முதன் முறையாக என் மகனுடன் விமானப்பயணம். ஹார்டிக் பாண்டியா வெளியிட்ட கியூட் போட்டோ – செம வைரல்

Agastya

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நீண்ட தொடரை முடித்துவிட்டு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக தயாராகி வருகிறது. பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த தொடரானது நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராக நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே பி.சி.சி.ஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு போட்டிகளும் சென்னையில் நடைபெறும் என்பதால் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் சென்னை வந்து ஆறு நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு பிறகு இரண்டாம் தேதி பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

ஏற்கனவே ரோகித் சர்மா, ரஹானே, தாகூர், கோலி ஆகியோர் சென்னை வந்தடைய அதன் பின்னர் ஒன்றன் பின் ஒருவராக சென்னை வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது முதல் இரு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தனது குழந்தை மற்றும் மனைவியுடன் சென்னை வந்துள்ளார்.

Pandya-5

குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக அவரது குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்துள்ள அவர் தனது மகிழ்ச்சியை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

மேலும் அதில் அவர் எனது மகனின் முதல் விமான பயணம் என்று பதிவிட்டுள்ளார். ஹார்டிக் பாண்டியா பதிந்த இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.