மைதானத்துக்கு வெளியே பறக்கும் அளவிற்கு அசுரபலத்துடன் சிக்ஸ் அடித்த பாண்டியா – வீடியோ

Hardik
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் வீரரான ஹார்டிக் பாண்டியா கடைசி ஓவரில் அசுரபலத்துடன் ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார். அவர் அடித்த இந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரையின் மேலே பறந்து சென்றது. இந்த சிக்ஸர் 103 மீட்டர் தூரம் சென்றது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த போட்டியில் 14 பந்துகளில் 32 ரன்களை குவித்து ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாண்டியா திகழ்ந்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். மேலும், பந்துவீச்சில் 3 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement