ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய மோசமான தோல்வியை சந்தித்தது. அதனை அடுத்து தற்போது இந்த சூப்பர் 12-சுற்றின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற்றப்பட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனெனில் சமீப காலமாகவே பந்து வீசாமல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வரும் பாண்டியா-வால் இந்திய அணிக்கு போதுமான பங்களிப்பை வழங்க முடியவில்லை.

மேலும் அவர் தொடர்ந்து பந்துவீசாமல் இருப்பதாலும் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டு உள்ளதாகவும், அதில் திருப்தி கரமாக செயல்பட்டு உள்ளதால் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அடுத்த போட்டியில் பாண்டியா எவ்வாறு பந்துவீச போகிறார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாண்டியா இப்படி வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்துவீச தோனி தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பந்து வீசாமல் பாண்டியா அணியில் நீடிப்பது கடினம் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அணியின் ஆலோசகர் தோனி அவரை பந்துவீச அழைத்து அவருக்கு சில பந்துவீச்சு பயிற்சிகளையும் அளித்துள்ளார்.

சுமார் 15 நிமிடம் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். அதை தோனியும் கவனித்து அவரது பந்து வீச்சில் உள்ள குறைகளை சுட்டிக் காண்பித்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இப்படி பாண்டியாவின் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னர் தோனி அவரது ஆலோசனைகளை அளித்ததால் பாண்டியாவால் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிராக தோனியின் ஸ்டைலை பாலோ பண்ண இருக்கும் விராட் கோலி – திட்டம் பலிக்குமா?
மேலும் பாண்டியாவின் பந்துவீச்சை உன்னிப்பாக கவனித்த பயிற்சியாளர்கள் மத்தியிலும் அவரது பந்துவீச்சு திருப்தி அடைந்ததன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணிக்கு பாண்டியா அறிமுகமான போது அவரை சிறப்பாக கையாண்ட தோனி மீண்டும் ஒருமுறை பாண்டியாவின் கம்பேக்கிற்கு தனது பயிற்சியின் மூலம் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



