நியூசிலாந்து அணிக்கெதிராக தோனியின் ஸ்டைலை பாலோ பண்ண இருக்கும் விராட் கோலி – திட்டம் பலிக்குமா?

Kohli-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

INDvsPAK

- Advertisement -

ஏனெனில் அடுத்து வர இருக்கும் மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கிடையே நடைபெற இருப்பதால் அந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புதிய திட்டத்துடன் விராட் கோலி களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது வழக்கம்.

ashwin

அந்த வகையில் இந்திய அணியில் தற்போது மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, ஷமி விளையாடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் ஒரு சில ஓவர்கள் பாண்டியா வீசவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னை கேப்டனா ஆக்குங்க. இல்லனா டீம்ல இருந்து வெளிய போய்டுவேன் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வீரர்

இதன் காரணமாக இந்த திட்டத்துடன் கோலி அந்த போட்டியில் களமிறங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்கிற காரணத்தினால் இந்த திட்டம் சிறப்பாகவே அமையும். இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக அஷ்வின் அணியில் இடம்பெற அதிகமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement