நான் சிறப்பாக பந்து வீசியதற்கு இவர் தான் காரணம்.! “ஐடியா” அருமை.! மனம் திறந்த பாண்டியா.!

pandi-3
- Advertisement -

இந்திய அணியின் வீரர் ஹார்டிக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் 6 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் செய்து 28 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த “Spell ” இங்கிலாந்து அணியை புரட்டி போட்டது என்றே கூறலாம். இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குக் மற்றும் ஜென்னிங்ஸ் இணைந்து முதல் விக்கெட்க்கு 54 ரன்களை சேர்த்திருந்தனர். அதுவும் உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் விழவில்லை என்பது குறிப்பிடதக்கது.

hp

- Advertisement -

அதற்கடுத்த “Session “-ல் இங்கிலாந்து அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 54 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்த இவர்கள் 161 ரங்களுக்கு “ஆல் அவுட்” ஆனார்கள்.இதுகுறித்து பாண்டியா கூறியது. இதே போன்று பந்து வீசவே விரும்புகிறேன். நான் வைடாகச் சென்று வீசும்போது பேட்ஸ்மென்கள் பந்து உள்ளே வருகிறது என்று கருதுகின்றனர் ஆனால் பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது.

இஷாந்த் சர்மாவும் என்னிடம் கூறும்போது விக்கெட்டுகளின் பின்னால் ஓடாதே, சரியான இடத்தில் பந்தைப் பிட்ச் செய்தால் உன்னிடம் அவர்களை வீழ்த்தும் திறமை இருக்கிறது என்றார். பந்தினை ஷாட் பிச்சாக எட்ஜ் ஆகுமாறு தொடர்ந்து வீசிக்கொண்டே இரு, அவர்கள் பொறுமையை இழப்பார்கள். அப்போது கண்டிப்பாக உன்னுடைய பந்து வீச்சிற்கு அவுட் ஆவார்கள். என்று என்னிடம் கூறினார்.

ishanth

இஷாந்த் சர்மா கொடுத்த இந்த ஐடியா எனக்கு சாதகமானது. தொடர்ந்து சரியான லைனில் பந்து வீசினேன், விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன. மேலும் ஒரு போட்டியில் நான் சதம் அடிப்பதை விட, இதுபோன்ற 5 விக்கெட் வீழ்த்தும் பவுலிங் தான் எனக்கு மகிழ்ச்சியை தரும் என்று பாண்டியா கூறினார்.

Advertisement