பாண்டியா சகோதரர்களை ஆட்டிப்படைக்கும் 19 வயது ரஷீத் கான் – காரணம் இதுதான் ?

kurnal
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி இதுவரை போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை 21 போட்டிகளில் நேற்று நடந்த போட்டி தான் மிகவும் கேவலமாக போட்டியாக கருதப்பட்டது. நேற்று இரவு ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட மும்பை அணி அந்த அணியின் ரஷீத் கான் பந்தை சாமளிக்க முடியாமல் திணறியது. இதனால் 118 ரன் என்ற எளிய இலக்கினை எட்ட முடியாமல் மும்பை அணி சொந்த மண்ணில் தோல்வி தழுவியது.
rashid-khan

ஏற்கனவே நடந்து முடிந்த 6 போட்டிகளில் அத்தி பூத்தார் போல் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று டாஸ் வென்ற மும்பை அணி ஹைட்ரபாத் அணியை முதலில் களமிறக்கியது.பின்னர் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஒவேர்கள் முடிவில் 118 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 119 என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கரறான சூர்ய குமார் யாதவ் மற்றும் லீவிஸ் களமிறங்கினர். சுலபமான இலக்கு தானேனு சூர்ய குமார் பொறுமையாக ஆட மறுப்புறம் விக்கெட்டுகள் சர சர வென சரிந்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் சூர்ய குமாரும் மொஹமத் நபி வீசிய பந்தில் அவுட்டாக மும்பை அணியின் சுழி ஆரம்பித்தது. பின்னர் இறுதியாக மும்பை அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த பாண்டியா களமிறங்கினார் அவரும் ரஷீத் வீசிய பந்துகளை சமாளிக்க முடியாமல் தினறினார்.  ஒருகட்டத்தில் ரஷீத் வீசிய 17 -வது வரை எதிர்கொண்ட பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் போக அந்த ஓவர் மேடின் ஓவராக மாறியது. டி20 போட்டிகளை பொறுத்தவரை மேடின் ஓவர் என்பதே அபூர்வம் அனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அதுவும் 17 வது ஒவேரில் மேடின் செய்வது என்றால் அது மிகவும் சாத்தியமே இல்லை .

hardhik

பாண்டியாவும் ரஷ்த் கானின் பந்துகளை அடிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை இறுதியில் 24 ரன்கள் எடுத்திருந்த பொது பாண்டியாவியின் முட்டியை உடைத்து அனுப்பியது போன்று அவரை எல் .பி.டபுள்யூ செய்து வழியனுப்பி வைத்தார் ராஷித் கான். இறுதியாக 18.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களில் சுரண்டது மும்பை அணி மேலும் சன் ரைசஸ் அணியின் ரஷீத் கான் 4 ஓவர் வீசி வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது

Advertisement