இரண்டு புதிய உலகசாதனை படைத்த பாகிஸ்தான்.! அதிரடி காட்டிய பக்கர் சமான்.!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷயத் அன்வர் அடித்த 194 ரன்கள் தான் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சாதனையை முறியடித்ததோடு ஒரு நாள் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாகிஸ்தான் அணியின் வீரர் பகர் சமான்.

Fakhar

அதே போல சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த முதல் துவக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையும் படைத்துள்ளனர் பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹஃக் மற்றும் பகர் சமான். ஜிம்பாபேவிற்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனைகள் நடைபெற்றுள்ளது.

ஜிம்பாபேவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடிய வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் 4 வது போட்டி நேற்று (ஜூலை 20 ) குயின்ஸ் ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.,

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரகளான இமாம்-உல்-ஹஃக் மற்றும் பகர் ஜமான் 304 ரன்களை குவித்தனர். இது சர்வதேச ஒரு நாள் போட்டி வரலாற்றில் முதல் விக்கெட் குவித்த அதிகபட்ச ரன்னாகும். அதே போல இந்த போட்டியில் பகர் சமான் 156 பந்துகளில் 210 ரன்களை குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் இராட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் சர்வதேச அளவில் இரட்டை சதமடித்த 6 வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

pakistan-vs-zimbabwe

இதுவரை சர்வேதேச ஒரு நாள் போட்டிகளில் 8 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அந்த விவரம் இதோ

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 200*- vs தென்னாபிரிக்கா(2010)

வீரேந்திர ஷேவாக் (இந்தியா) 219 – vs மேற்கிந்திய அணி (2011)

ரோஹித் ஷர்மா (இந்தியா) 209 – vs ஆஸ்திரேலிய (2013)

ரோஹித் ஷர்மா (இந்தியா) 264- vs இலங்கை (2014)

கிரிஷ் கெய்ல் (மேற்கிந்திய அணி) 215 – vs ஜிம்பாபே (2015)

மார்ட்டின் குப்தில் (நியூஸிலாந்து) 237* – vs மேற்கிந்திய அணி (2015)

ரோஹித் ஷர்மா (இந்தியா) 208* – vs இலங்கை (2017)

பகர் சமான் (பாகிஸ்தான்) 210* – vs ஜிம்பாபே (2018)