ட்ரேக்டர் விற்ற காசுல பாகிஸ்தான் மாதிரி இந்தியா ஏமாத்தல.. அவர் இதயத்தை ஜெய்ச்சுட்டாரு.. ரசிகர் பேட்டி

Pakistan Fan
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. குறிப்பாக கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் முதல் முறையாக ஒரு உறுப்பு நாட்டு அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது.

அதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் வேதனையில் தள்ளப்பட்டனர். அந்த நிலையில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெறும் 120 ரன்களை துரத்த முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் டி20 உலகக் கோப்பையில் 7வது முறையாக இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஏமாற்றாத இந்தியா:
முன்னதாக அப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதை நேரில் பார்ப்பதற்காக ஒரு பாகிஸ்தான் ரசிகர் தன்னுடைய டிராக்டரை சராசரியாக இரண்டரை லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்றுவிட்டு டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால் கடைசியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததால் அந்த ரசிகர் மைதானத்திலேயே தன்னுடைய குழந்தையுடன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நிலையில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்தியா நேற்று அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்தியாவுக்கு சூரியகுமார் யாதவ் 50*, சிவம் துபே 31* ரன்கள் எடுத்து 18.2 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் அந்தப் போட்டியை தாம் நேரில் பார்த்ததாக அதே பாகிஸ்தான் ரசிகர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்த அமெரிக்காவை அப்போட்டியில் வீழ்த்திய இந்தியா தம்முடைய இதயத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக நான் என்னுடைய டிராக்டரை 3000 டாலர்களுக்கு விற்றேன். ஆனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் நான் ஏமாற்றடைந்தேன்”

இதையும் படிங்க: கொஞ்சம் மிஸ்.. அதை செஞ்சுருந்தா இந்தியாவை தோற்கடிச்சுருப்போம்.. கம்பேக் கொடுப்போம்.. அமெரிக்க கேப்டன் பேட்டி

“ஆனால் பொது ரசிகர்கள் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தனர். அதனால் இன்று நான் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உணர்ந்தேன். இன்று சூரியகுமார் என்னுடைய இதயத்தை வென்றார். டிராக்டரை விற்று செலவு செய்த பணத்தை தற்போது இந்தியா மதிப்பாக்கியுள்ளது” என்று கூறினார். அந்த வகையில் பாகிஸ்தான் ஏமாற்றினாலும் இந்தியா தம்மை ஏமாற்றவில்லை என்று அந்த ரசிகர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement