கொஞ்சம் மிஸ்.. அதை செஞ்சுருந்தா இந்தியாவை தோற்கடிச்சுருப்போம்.. கம்பேக் கொடுப்போம்.. அமெரிக்க கேப்டன் பேட்டி

Aaron Jones 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் கனடாவை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அந்த அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

ஜூன் 12ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவரில் 110/8 மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி கோல்டன் டக் அவுட்டானார்.

- Advertisement -

ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு:
மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மாவும் 3 ரன்கள் ஆட்டமிழந்தார். அதே போல 3வது இடத்தில் அதிரடி காட்ட முயற்சித்த ரிஷப் பண்ட்டும் 18 (20) ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 50* ரன்களும் சிவம் துபே 31* ரன்களும் எடுத்து 18.2 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

அதனால் அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக நேத்ராவல்கர் 2 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் 10 – 15 ரன்கள் கொஞ்சம் அதிகமாக எடுத்திருந்தால் இந்தியாவை தோற்கடித்திருப்போம் என்று அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி கண்டு சூப்பர் 8 சுற்றுக்கு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “10 – 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். ஒருவேளை நாங்கள் 130 ரன்கள் எடுத்திருந்தால் அது சேசிங் செய்வதற்கு கடினமான இலக்காக இருந்திருக்கும். எங்களுடைய வீரர்கள் கட்டுக்கோப்புடன் செயல்பட்டனர். எங்களுடைய பவுலிங் நினைத்து பெருமைப்படுகிறேன். இருப்பினும் நன்றாக உணர்கிறோம். இதைத் தான் நாங்கள் அமெரிக்க கிரிக்கெட்டில் எதிர்பார்த்தோம்”

இதையும் படிங்க: ஆஹா நியூஸிலாந்து 90% நாக் அவுட்டானதால் இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சூப்பர் 8, செமி ஃபைனல் வாய்ப்பு இதோ

“எங்களுடைய செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்வோம். சில மீட்டிங் நடத்தி விட்டு வலுவாக கம்பேக் நான் கொடுப்போம். பிட்ச் கொஞ்சம் தந்திரமானது வேகப்பந்து வீச்சுக்கு பொருத்தமாக உள்ளது. அதனால் தான் ஸ்பின் இல்லை. எங்கள் வீரர் மோனக் பட்டேல் கடைசி போட்டிக்கு ஃபிட்டாகி வருவார்” என்று கூறினார்.

Advertisement