இந்திய அணியின் நட்சத்திர வீரரான இவரே எனது ரோல் மாடல் – இளம் பாகிஸ்தான் வீரர் பேட்டி

Haider-2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஆடியவர் ஹைதர்அலி . இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அபாரமான ஆட்டத்தை காட்டினார்.

Haider

- Advertisement -

9 போட்டிகளில் 239 ரன்களைக் குவித்தார். மிகவும் இளம் வீரரான ஹைதர்அலி அபாரமான பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படியே இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட்கோலி அல்லது பாபர் அசாம் போன்ற வீரர்களை போன்று வருவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர் தனக்கு முன்மாதிரி பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கிரிக்கெட்டில் எனது முன்மாதிரி என்றால் இந்திய அணியின் துணைக்கேப்டனான ரோஹித் சர்மா தான் முன்மாதிரி என்று கூறியுள்ளார் ஹைதர்அலி. இதுகுறித்து அவர் கூறுகையில்

என்னுடைய முன்மாதிரி வீரர் ரோகித் சர்மா தான். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் பிடிக்கும். அதுவே அவரது மிகச் சிறந்த விஷயமாகும். என்னுடைய ஆட்டத்திலும் அதுபோல் இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஹைதர் அலி.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரராக தற்போது விளங்கி வருபவர் பாபர் அசாம். அவர் இந்திய அணியின் கேப்டனும் சர்வதேச அளவில் சிறந்த வீரரான விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார். அப்படி இருக்கையில் ஹைதர் அலியின் இந்த பேட்டி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹைதர் அலி விரைவில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து சாதிப்பார் என்று பாகிஸ்தான் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement