80க்கு 20.. ஏஐ டெக்னாலஜி வெச்சு.. இந்தியா போன்ற யாருமே செய்யாத அறிவிப்பை வெளியிட்ட பாக் தலைவர்

PCB Chairman
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் 1992 சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் ஐசிசி தொடர்களில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

அதை விட தற்போது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 1 வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. அதனால் பாபர் அசாம், சாகின் அப்ரிடி போன்ற வீரர்களை நீக்க வேண்டும் என்று அந்நாட்டில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தானின் இந்த வீழ்ச்சிக்கு வாரியத் தலைவர் மோசின் நக்வி முக்கிய காரணமாக இருப்பதால் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

- Advertisement -

ஏஐ டெக்னாலஜி:

இந்நிலையில் விரைவில் பாகிஸ்தான் அணியை ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தி தேர்ந்தெடுக்க உள்ளதாக மோசின் நக்வி அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற வேறு எந்த நாடும் செய்யாத முடிவை எடுக்க உள்ளது பற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு. “தேர்வு செய்வதற்கு தகுந்த தரமான வீரர்கள் இல்லாதது தேர்வுக் குழுவிடம் பிரச்சனையாக இருக்கிறது. எங்களிடமும் எந்த மாதிரியான வீரர்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற திடமான டேட்டா இல்லை”

“அதனால் மொத்த சிஸ்டமும் பிரச்சினையாக உள்ளது. உள்ளூர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும். அந்தத் தொடரிலிருந்து நாங்கள் ரெக்கார்டை எடுக்க உள்ளோம். ரெக்கார்ட் இல்லாத பல வீரர்கள் எங்களிடம் உள்ளனர். எனவே அடுத்த நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை நம்முடைய கிரிக்கெட்டை வலுவாக்கும்”

- Advertisement -

காமெடி அறிவிப்பு:

“அதனால் நமக்கு 150 தரமான வீரர்கள் கிடைப்பார்கள். அதன் பின் தேவையானவற்றை தேர்வுக் குழுவினர் செய்வார்கள். சுமாரான வீரர்களை இன்றே வெளியேற்றி அதிரடியான முடிவை எடுங்கள் என்று மக்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஏற்கனவே உள்ள வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைக்கும் வரை நீங்கள் அதைச் செய்ய முடியாது. அந்த 150 வீரர்களில் சிறந்தவர்களை 80% ஏஐ டெக்னாலஜியும் 20% மனிதர்களும் தேர்ந்தெடுப்பார்கள்”

இதையும் படிங்க: தோனி கிடையாது.. அந்த இந்திய வீரர் தான் ஒய்ட் பால் கிரிக்கெட்டின் மகத்தான ஃபினிஷர்.. ஆண்டர்சன் பேட்டி

“எனவே அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தேர்வுக்குழுவுக்கு 20% மட்டுமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுப்போம்” என்று கூறினார். அவருடைய இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நகைச்சுவையாக கிண்டலடிக்கின்றனர். ஏனெனில் ஒரு வீரர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் வலைப்பயிற்சியிலும் எம்மாதிரியான திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதை பார்த்து தேர்ந்தெடுப்பதே சரியான வழியாகும். அதை விட்டுவிட்டு புள்ளி விவரங்களை வைத்து டெக்னாலஜியை பயன்படுத்தி தேர்ந்தெடுத்தால் பாகிஸ்தான் அணி இன்னும் பாதாளத்திற்கு செல்லும் என்றால் மிகையாகாது.

Advertisement