- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சரிந்து கிடக்கும் பாகிஸ்தானுக்கு இவரை மாதிரி ஆள் தான் தேவை.. டேனிஷ் கனேரியா வெளிப்படை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் அமெரிக்கா, ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதன் உச்சமாக நடைபெற்ற முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது.

அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதல் முறையாக ஒரு தொடரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதனால் அந்நாட்டில் பாகிஸ்தான் அணி மீது உச்சகட்டமான விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கேப்டன் பதவி விலக வேண்டும், வாரிய தலைவர் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன.

- Advertisement -

சரிவில் பாகிஸ்தான்:

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு கௌதம் கம்பீர் போன்ற ஒரு பயிற்சியாளர் தேவை என அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே அனைத்தும் அவர்களுடைய விருப்பத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது”

“இங்கே அடிக்கடி கேப்டன்கள் மாற்றப்படுகின்றனர். அது வேலை செய்யவில்லை. முதலில் ஒரு கேப்டனுடன் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு வருடம் முழுமையான வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதன் பின் முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்க வேண்டும். அதுவரை கேப்டனை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு முழுமையான ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதும் நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில்பின்னர் கடினமான முடிவுகளை எடுக்கலாம்”

- Advertisement -

கெளதம் கம்பீர் மாதிரி:

“ஏனெனில் அப்போதும் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்கவில்லையெனில் விஷயங்கள் நடக்காது. இன்று இந்தியா போன்ற மற்ற அணிகள் ஏன் நன்றாக செயல்படுகின்றன? ஏனெனில் அவர்களுடன் ராகுல் டிராவிட் நன்றாக வேலை செய்தார். தற்போது வந்த கிரிக்கெட்டர் மற்றும் நபரான கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் உள்ளார்”

இதையும் படிங்க: 4, 4, 4, 4, 4.. 33 பந்தில் 61.. சுப்மன் கில் அணியை தெறிக்க விட்ட சர்பாரஸ் – பண்ட்.. இந்தியா பி மிரட்டல்

“அவர் என்ன ரியாக்சன் கொடுக்கிறார் என்பதை தனது முகத்தில் காண்பிக்கிறார். அவர் மறைமுகமாக சென்று யாரையும் கடிக்காமல் நேராக முகத்துக்கு நேராக சொல்கிறார். நீங்கள் அப்படித்தான் வலுவான நபராக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை பின்புலத்தில் எடுக்காமல் நேருக்கு நேராக எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களில் பாகிஸ்தான், பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் போன்ற பதவியில் நிலையான வாய்ப்பு கொடுக்காமல் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -