ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்க உள்ளது. அத்தொடருக்கு முன்பாக ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் முத்திரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த 2 தொடர்களுக்கான தங்களுடைய அணியை பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் கேப்டனாக வந்தது முதல் தடுமாற்றமாக விளையாடிய அவர் பாகிஸ்தானின் தோல்விகளுக்கு முக்கிய காரணமானார். அவருடைய தலைமையில் ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற கத்துக் குட்டிகளிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது.
பாபர், ரிஸ்வானுக்கு டாட்டா:
அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்து சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே போல மற்றொரு நட்சத்திரம் முகமது ரிஸ்வானும் சமீப காலங்களாகவே மெதுவாக விளையாடி தோல்விகளுக்கு காரணமாக வந்தார். அதனால் அவ்விருவர்களையும் பாகிஸ்தான் வாரியம் கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமான விராட், ரோஹித் ஆகிய சீனியர் வீரர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு பதில் சுப்மன் கில் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தியது.
பாகிஸ்தான் அணி:
அதே வழியில் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணியும் தங்களுடைய 2 சீனியர் வீரர்களை கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை பாபர், ரிஸ்வான் இல்லாமல் 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. அந்த தன்னம்பிக்கையில் அவர்களை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் சல்மான் ஆகா தலைமையில் புதிய அணியை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தை பாத்து ஒரு புதிய ரூல்ஸ்ஸை அமல்படுத்திய பி.சி.சி.ஐ – என்ன ரூல் தெரியுமா?
இதனால் பாபர், ரிஸ்வான் ஆகியோருடைய சர்வதேச டி20 கேரியர் கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி: சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அஹ்மத், பாஹீம் அஸ்ரப், ஃபகார் ஜமான், ஹரிஷ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தாலட், குஷ்தில் ஷா, முகமத் ஹரிஷ் (கீப்பர்), முகமத் நவாஸ், முகமத் வாசிம், பர்ஹான், சாய்ம் ஆயுப், சல்மான் மிர், ஷாஹீன் அப்ரிடி, சுபியன் மோகிம்



