திருமணம் செய்வதாக கூறி கர்பமாக்கிவிட்டார் பாகிஸ்தான் அணி வீரர் மீது பாலியல் புகார் – பரபரப்பு குற்றச்சாட்டு

Abuse
- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அங்கு மூன்று டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட போகிறது. டி20 போட்டிகள் டிசம்பர் 18-ஆம் தேதியும் டெஸ்ட் போட்டிகளில் அதன் பின்னரும் துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் உள்ள 7 வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்புக்கு இடையே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது.

- Advertisement -

இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் திடீரென பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் மீது அந்த நாட்டில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்…

பாபர் அசாமை எனக்கு பத்து வருடங்களாக தெரியும் அவர் என்னுடைய பள்ளி கால நண்பர். 2010ஆம் ஆண்டு என்னிடம் அவர் காதலை தெரிவித்திருந்தார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். அவர் பிரபலம் ஆவதற்கு முன்னர் இருந்தே நாங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்திருந்தார் பாபர் அசாம் அந்த உறுதியை வைத்து என்னுடன் உறவு வைத்துக்கொண்டார்.

azam

இதன் காரணமாக நான் கர்ப்பம் அடைந்துவிட்டேன் என்று தெரிந்ததும் அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். பின்னர் என்னை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப்பெண் பாபர் அசாம் தற்போது பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். அவர் மீது கூறப்பட்டுள்ள இந்த பாலியல் வழக்கு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

azam 1

சர்வதேச அளவில் விராட் கோலி மற்றும் இதர சிறந்த வீரர்களுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வரும் பாபர் அசாம் இப்படி ஒரு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement