
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள வேளையில் நமது அணியே கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
இந்த உலக கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து நமீபியா அணிக்கு எதிராக பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் என அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய ஆட்டமாக பார்க்கப்படும் இந்த போட்டியானது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான அணி ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது. அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று ஐசிசி எச்சரித்தது.
ஆனால் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. வங்கதேச அணிக்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமரும் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டுமெனில் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் பாகிஸ்தான் வாரியம் முன் வைத்துள்ள அந்த மூன்று நிபந்தனைகள் யாதெனில் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் வேளையில் அதில் கிடைக்கும் வருவாயில் அதிக பங்கினை தங்களுக்கு தர வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அதேபோன்று இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
இதையும் படிங்க : நல்லபடியா ஆபரேஷன் நடந்து முடிஞ்சிடுச்சி..காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய – ஹர்ஷித் ராணா
மூன்றாவதாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை இப்படி மூன்று நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் நிச்சயம் நாங்கள் விளையாடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.