
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பாகிஸ்தான் அணி எல்லைப் பிரச்சினை காரணமாக தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடியது. அங்கே வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.
அடுத்தப் போட்டியில் பரம எதிரி இந்தியாவிடம் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. ஆடவர் கிரிக்கெட்டில் 2021க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளிலும் பாகிஸ்தான் 8 தோல்விகளைச் சந்தித்தது. குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் தோற்கடித்து இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளுடன் கோப்பையை வென்றது.
இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிறுத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக 2025 ஆசியக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்தியா வெளியேறியது. அதற்கு பதிலடியாக சூப்பர் 4 சுற்றில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் தம்முடைய பேட்டை வைத்து துப்பாக்கியால் இந்தியாவை சுடுவது போல் கொண்டாடினார்.
அத்துடன் ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையாக செய்து காட்டி இந்தியாவை கலாய்த்தார். அதற்கெல்லாம் இந்திய அணி பாகிஸ்தானுக்கு தோல்விகளை பரிசளித்து தக்க பதிலடி கொடுத்தது வேறு கதை. அதே காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பாகிஸ்தான் மகளிரணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணி 3வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் ஹரிஷ் ரவூப் போல பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சானா இந்திய விமானம் விழுவது போல் சைகை செய்து இந்தியாவை கலாய்த்தார். அத்துடன் ஆட்டநாயகி விருது வென்ற நசாரா சந்து 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை சைகையாக செய்து காட்டி இந்தியாவை கலாய்த்தார்.
அந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்காவிடம் 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: காலம் கடந்த பின் குல்தீப்.. 2 மாற்றதுடன் 3வது ஒன்டேவில் மோசமான முடிவை எடுத்த இந்திய அணி
மொத்தத்தில் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அன்று 6 – 0 என்ற போலியான கருத்தை வைத்து இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் மகளிரணி இன்று உலகக் கோப்பையில் 0 வெற்றியுடன் ஜீரோவாகி வீட்டுக்கு சோகத்துடன் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இந்திய மகளிரணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.