காலம் கடந்த பின் குல்தீப்.. 2 மாற்றதுடன் 3வது ஒன்டேவில் மோசமான முடிவை எடுத்த இந்திய அணி

Sydney ODI 2
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பத்திலேயே கோப்பையை கோட்டை விட்டது. அடுத்ததாக சம்பிரதாய கடைசிப் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துவங்கியது.

இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் மீண்டும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் காலம் கடந்த பின் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவதாக கேப்டன் கில் அறிவித்தது ரசிகர்களை வெறுப்பேற்றியது. ஏனெனில் முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

காலம் கடந்த பின்:

பெரிய மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் அவரை விளையாட வைத்தால் இந்தியா வெற்றி பெறும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அதைக் கேட்காத கௌதம் கம்பீர் – சுப்மன் கில் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக அவரை பெஞ்சில் அமர வைத்தனர். அந்த முடிவு இந்திய அணிக்கு தோல்வியை மட்டுமே கொடுத்தது.

குறிப்பாக 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை தோற்கடித்தார். மறுபுறம் அவரைப் போன்ற திறமை கொண்ட குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர்ந்து கொண்டு இந்தியாவின் தோல்வியை மட்டுமே பார்த்தார். மொத்தத்தில் காலம் கடந்த பின் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு பதிலாக நிதிஷ் ரெட்டி லேசான காயத்தால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணி:

இது போக அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்த இந்திய அணி மற்றொரு மோசமான முடிவை எடுத்துள்ளது. ஏனெனில் இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் (3) இருக்கிறார். அப்படிப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவரை நீக்கியுள்ள இந்திய அணி மற்றொரு வலதுகை பவுலரான கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்துள்ளது.

இதையும் படிங்க: இரண்டு டக் அவுட் ஆனா என்ன? கடைசி போட்டியில் நிச்சயம் விராட் கோலி இதை செய்வார் – மைக்கல் கிளார்க் கருத்து

3வது ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல் (கீப்பர்), குல்தீப் யாதவ், முகமத் சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா

Advertisement