இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அதன் காரணமாக தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 உலககோப்பை தொடர் வரை தான் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த அவர் சமீபகாலமாகவே தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் பார்ம் அவுட்டாகி தவித்து வருகிறார்.
விராட் கோலி 3 ஆவது போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார் : மைக்கல் கிளார்க்
கடந்த ஏழு மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் இணைந்துள்ள அவர் இதுவரை தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்களை குவிப்பார் என்று பலராலும் பேசப்பட்ட விராட் கோலி முதல் போட்டியில் 8 பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார்.
பின்னர் இரண்டாவது போட்டியிலும் 4 பந்துகளில் டக் அவுட்டாகினார். இப்படி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாவது அவரது 17 வருட கிரிக்கெட் கரியரில் இதுவே முதல்முறை. அந்த அளவிற்கு இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் டச் இன்றி தவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் மூன்றாவது போட்டியில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன்களை விராட் கோலி தான் அடிப்பார் என்றும் இரண்டாவது போட்டியின் போது அடிலெய்டு மைதானத்தில் அதிக ரன்கள் அடிப்பார் என்றும் மைக்கேல் கிளார்க் கூறியிருந்தார்.
ஆனால் அவர் கூறியதற்கு மாறாக முதல் 2 போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டாகி இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போட்டியிலும் விராட் கோலி தான் அதிக ரன்கள் அடிப்பார் என்பது குறித்து பேசிய மைக்கல் கிளார்க் கூறுகையில் : என்னை பொறுத்தவரை சிட்னி போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் வீரராக ஜோஷ் ஹேசல்வுட் இருப்பார்.
இதையும் படிங்க : இன்னும் 93 ரன்கள் தேவை.. சேவாக்கை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்த – ஹிட் மேனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
அதேபோன்று அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார். முதல் இரண்டு போட்டியில் அவர் டக் அவுட்டாகி இருந்தாலும் நிச்சயம் விராட் கோலி தான் கடைசி போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் ரன் குவிக்கும் வேட்கையுடன் இருப்பதாக மைக்கல் கிளார்க் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.



