இந்தியாவை மண்ணை கவ்வ வெச்சு.. இதை செஞ்சு 24 கோடி இதயங்களை வெல்லுங்கள்.. பாகிஸ்தான் பிரதமர் பேச்சு

Shabaz Sherif
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் விரைவில் பாகிஸ்தானில் துவங்குகிறது. வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கும் அந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன. அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது.

முன்னதாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் இப்போது தான் தங்களது நாட்டில் நடத்துகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக தங்கள் நாட்டில் உள்ள மைதானங்களை பல கோடி ரூபாய்கள் செலவில் பாகிஸ்தான் வாரியம் புதுப்பித்துள்ளது. அதனுடைய நிறைவு பணிகள் தற்போது முடிவு பெற்றன. அதை அடுத்து அந்த மைதானங்களை பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் செபாஷ் சரீஃப் திறந்து வைத்தார்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துங்க:

குறிப்பாக லாகூரில் இருக்கும் கடாபி மைதானத்தை பிப்ரவரி 7ஆம் தேதி இரவு நடைபெற்ற வண்ணமிகு விழாவில் அவர் திறந்து வைத்தார். அந்த மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விழாவில் பாகிஸ்தான் வீரர்கள் வாரியத் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.

அந்த விழாவில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி கோப்பையை வெல்லும் என்ற தன்னம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்று தற்போது நடப்புச் சாம்பியனாக களமிறங்குகிறது. அதே போல இம்முறையும் இந்தியாவை மண்ணை கவ்வ வைத்து 24 கோடி பாகிஸ்தான் மக்களின் இதயங்களை முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி வெல்லும் என்று நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:

இது பற்றி அவர் “நல்ல அணியை கொண்டுள்ள நாம் சமீபத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வது மட்டும் நமக்கு உண்மையான வேலை அல்ல. நம்முடைய பரம எதிரி இந்தியாவை துபாயில் வீழ்த்துவதும் முக்கிய வேலையாகும். அதற்காக மொத்த நாடும் நம்முடைய அணியின் பின்னால் நிற்கும். 29 வருடத்திற்கு பின் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி தொடரில் நாம் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்ற தன்னம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் வேலையாகாது.. ஃபார்முக்கு திரும்ப அந்த வீடியோக்களை பாருங்க.. சஞ்சய் பங்கர்

இம்முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2017 தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தியா முயற்சிக்கும் என்று நம்பலாம். அதனால் அந்தப் போட்டிக்காக இப்போது முதலே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement