PAK vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து விளையாடிய பாக் வீரர்கள் – காரணம் இதுதான்

உலகக் கோப்பை தொடரின் 17வது போட்டி இன்று ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டி

Pak
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 17வது போட்டி இன்று ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

pak 1

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களை அடித்தது. சிறப்பாக ஆடிய வார்னர் சதம் அடித்தார்.

தற்போது பாகிஸ்தான் அணி 308 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அதன் காரணத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபெர்ஸ் அகமது தெரிவித்தார்.

amir

அதன்படி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரியாசுதீன் என்கிற அம்பயர் இறந்ததன் காரணமாக அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தான் அணி கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்தார். ரியாசுதீன் அம்பயர் இதுவரை முப்பதுக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளிலும் 12 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement